லியோவின் தமிழ்நாடு அடுத்த வசூல் சாதனை… இத்தனை கோடியா?
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
இருப்பினும் உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜய், த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், லலித் குமார் உள்ளிட்ட பிரபலங்களும் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
அதன்படி, லியோ வெளியானது முதல் இதுவரை உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலருக்குப் பிறகு இந்தாண்டு தமிழ்நாட்டில் 200 கோடி வசூலை கடந்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது லியோ. அதேபோல் கேரளாவில் 60 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.
ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் முதல் தமிழ்ப் படமாக லியோ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பாளர் லலித் குமாரே கூறியிருந்தார்.
இந்நிலையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை இருப்பதால், ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் ரிலீஸாகின்றன. அதன்பின்னர் லியோ கலெக்ஷன் குறைந்துவிடும் என்றே சொல்லப்படுகிறது.