லியோ 2 ரெடி.. விஜய் ஓகே சொல்வாரா? லோகேஷ் கனகராஜ் பரபரப்பு பேட்டி

லியோ 2 ரெடி.. விஜய் ஓகே சொல்வாரா? லோகேஷ் கனகராஜ் பரபரப்பு பேட்டி
  • PublishedJune 19, 2024

அரசியல் கட்சியை அறிவித்த விஜய், தான் ஒப்புக்கொண்ட இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறியிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ இரண்டாம் படத்தின் கதை ரெடி, விஜய் ஓகே சொன்னால் ஆரம்பிக்கலாம் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ், குறும்படத்தை இயக்கி சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்த இவர், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மிகப் பெரும் வெற்றி படங்களை இயக்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை அள்ளியது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் லியோ 2 பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய்யின் எதிர்கால திட்டங்கள் வெகு உயரமாக இருக்கின்றன. லியோ 2 படத்திற்கான கதை ரெடியாக உள்ளது.

விஜய் சார் ஓகே சொல்லிவிட்டால் ஆரம்பிக்கலாம். லியோவில் சொல்லாத பல கதைகள் லியோ இரண்டாம் பாகத்தில் வரும் என்று கூறியுள்ளார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்காக 4 முதல் 5 மாதங்களாக முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *