“Tottenham Hotspur” கால்பந்து கிளப்பின் பக்கத்தில் இடம்பிடித்த நம்ம தளபதியின் பாடல்

“Tottenham Hotspur” கால்பந்து கிளப்பின் பக்கத்தில் இடம்பிடித்த நம்ம தளபதியின் பாடல்
  • PublishedDecember 13, 2023

லியோ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நா ரெடி தான்’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ’.

இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து இருக்கும் ‘லியோ’ படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

அதிலும் ‘நா ரெடிதான்’ பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. இந்த பாடல் பாராட்டை பெற்றாலும் வரிகளால் விமர்சனத்தையும் சந்தித்தது.

இந்நிலையில் ‘நா ரெடி தான்’ பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. அதாவது பிரீமியர் லீக் கால்பந்தில் பிரபல கால்பந்து அணியாக விளங்கும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் சமூக வலைதள பக்கத்தில், “எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ் உருவாத டா நம்ம டூல்ஸ் அத்தன பேரு அசைவும் ஒரே மாதிரி சிங்க்கு” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 10-ஆம் தேதி டாட்டன்ஹாம் அணிக்கும் நியூகேஸ்டில் அணிக்கும் இடையே நடந்த பிரிமீயர் லீக்கில் டாடன்ஹாம் அணி நான்கு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. எனவே அதை கொண்டாடும் வகையில் இந்த வரிகள் பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *