நேரு ஸ்டேடியத்தில் லியோ வெற்றி விழா… கொளுத்திப் போட்ட பிரபலம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ, கடந்த 19ம் தேதி வெளியானது.
லோகேஷின் LCU-ன் கீழ் உருவான இந்தப் படம், இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதேநேரம் படம் எதிர்பார்த்த அளவில் இல்லையென்றும் நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகின.
இந்நிலையில், லியோ வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக பிரபலம் ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார்.
விஜய்யின் லியோ ஏற்கனவே அறிவித்திருந்த படி அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவானதால், லியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. முன்னதாக லியோ படத்திற்கு ப்ரொமோஷன் செய்வதற்காக இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
லியோ ஆடியோ லான்ச், கடந்த மாதம் இறுதியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்தது. இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், திடீரென கேன்சல் செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தான் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாகவும் படக்குழு விளக்கம் கொடுத்திருந்தது.
இதனால் விஜய்யின் குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது லியோ வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படம் எதிர்பார்த்தளவில் சக்சஸ் இல்லை என நெகட்டிவான விமர்சனங்களும் தொடர்ச்சியாக வந்தவண்ணம் உள்ளன. இதனையடுத்து லியோ வெற்றி விழா பற்றி வலைப்பேச்சு பிஸ்மி போட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
அதில், “லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி நடைபெறுகிறது. விஜய் கலந்துகொள்ளும் இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்புக் கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மேலே ‘Scoop’ என்றும் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், Leo Block Buster, Leo Disaster என்ற ஹேஷ்டேக் உடன் ஷேர் செய்துள்ளார். இதனால் வலைப்பேச்சு பிஸ்மி சொல்லும் தகவல் உண்மையா அல்லது படக்குழுவினரை கலாய்ப்பதற்காகவா என்பது தெரியவில்லை. விஜய் ரசிகர்களும் இதே குழப்பத்துடன் விவாதித்து வருகின்றனர். அதேநேரம் வலைப்பேச்சு பிஸ்மி இந்த டிவிட்டர் பதிவுக்கு கமெண்ட்ஸ் செக்சனை ப்ளாக் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.