தோனி அகலக்கால் வைத்தாரா? LGM படத்தின் விமர்சனம்….

தோனி அகலக்கால் வைத்தாரா? LGM படத்தின் விமர்சனம்….
  • PublishedJuly 28, 2023

எம் எஸ் தோனி சொந்தமாக தோனி என்டர்டைன்மென்ட் என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

அதில் தன்னுடைய முதல் படமாக ஹரிஷ் கல்யாணை வைத்து எல்ஜிஎம் படத்தை தயாரித்து இருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் நதியா ஆகியோர் நடிப்பில் எல்ஜிஎம் படம் உருவாகி இருக்கிறது. லெட்ஸ் கெட் மேரீட் என்பதை சுருக்கமாக எல்ஜிஎம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இருவரும் கண்டிஷன் பெயரில் 2 வருடம் பழகி வருகிறார்கள். இந்த பழக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மாறுகிறது. ஹரிஷ் கல்யாண் அம்மாவாக நதியா நடித்திருக்கிறார்.

படம் முழுக்க காமெடி என்ற பெயரில் இயக்குனர் ஏதோ சில விஷயங்களை புகுத்திருக்கிறார். அதுவும் இரண்டாம் பாதியில் மோசமான காமெடி காட்சிகளாக இடம்பெற்று இருக்கிறது..

தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவது லாஜிக் தான். ஆனால் மாமியாருடன் பழகி பார்க்க வேண்டும் என்று இவானா சொல்வது கொஞ்சம் ஓவர் தான். மொத்தத்தில் எல்ஜிஎம் படத்தின் மூலம் தோனி அகலக்கால் வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *