மேடையில் தளபதி சொல்லிய குட்டி ஸ்டோரீஸ்!
தளபதி விஜய் விருது வழங்கும் விழாவில் வெறும் 10 நிமிடம் தான் பேசினார். ஆனால் அந்த பத்து நிமிடத்திற்காக ரசிகர்கள் காத்துக்கிடந்தார்கள். சொல்ல வேண்டிய விடயங்களை சுருக்கமாக சொல்லிட்டு விருதுகளை வழங்கினார்.
இதற்கிடையோ லியோ படத்தின் ஆடியோ லான்சிற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். காரணம் தளபதியின் குட்டி ஸ்டோரிதான். பொதுவாக தளபதி ஆடியோ லாஞ்சில் சொல்லும் குட்டி ஸ்டோரிக்கு ரசிகர்கள் ஏராளம். அவ்வாறாக அவர் சொல்லிய சில குட்டி ஸ்டோரிகளை இந்த பதவில் பார்க்கலாம்.
வாரிசு : 90களில் தனக்கு போட்டியாக ஒருவர் இருந்தார், அவர் எப்போதுமே என்னை பின்தொடர்ந்து வந்தார், அவரை முந்த வேண்டும் என நான் வேகமாக ஓடினேன். அதேபோல் நாம் வாழ்க்கையில் எப்போதுமே முன்னேற ஒருவர் வேண்டும் என்று கூறினார். அதாவது நாம் தான் நமக்கு முதல் போட்டியாளர் எனக் கூறினார்.
மாஸ்டர் : அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது பலர் பூத்தூவி வரவேற்பார்கள். சிலர் கற்களும் எரிவதுண்டு. ஆனால் தண்ணீர் தன்னுடைய வேலை எதுவோ அதை நினைத்து தன் வழியில் சென்று கொண்டிருக்கும். அதேபோல் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தன்னுடைய வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிகில் : அதாவது பூக்கடையில் வேலை செய்யும் ஒரு பையனின் வேலை திடீரென போய் விடுகிறது. அதன் பிறகு தெரிந்தவர்கள் மூலம் பட்டாசு கடையில் விலைக்கு செல்கிறான். ஆனால் ஒரு பட்டாசுகள் கூட விற்கவில்லை என்று பார்த்தால் அப்போது அந்தப் பையன் பூக்கள் மேல் தண்ணீர் தெளிப்பது போல பட்டாசு மேல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் தெளித்துள்ளான். யாருக்கு எந்த திறமை இருக்கிறதோ அவர்களுக்கு அந்த வேலையை கொடுக்க வேண்டும்.