கைதி – 2, விக்ரம் – 2 வரிசையில் இணைந்தது “லியோ 2”… லோகேஷ் உறுதி
லோகேஷ் – விஜய் கூட்டணியின் முதல் LCU படமாக வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படம் LCU ஜானரில் உருவானது குறித்தும், விஜய் அதற்கு ஓக்கே சொன்னது பற்றியும் லோகேஷ் மனம் திறந்துள்ளார்.
மேலும், லியோ 2ம் பாகம் பற்றியும் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
லியோ படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங் குறித்து நெகட்டிவான விமர்சனங்களும் அதிகளவில் வந்தன. குறிப்பாக லியோவில் LCU சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை என்றும், விஜய்யின் கேரக்டர் ஸ்கெட்சிங் லோகேஷின் டச்சில் இல்லை எனவும் சொல்லப்பட்டன.
இந்நிலையில், லியோ இரண்டாம் பாதி குறித்து எழுந்த மோசனமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாக லோகேஷும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக லியோ படம் பற்றி லோகேஷ் இன்னும் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது லியோ படத்தின் கதையை 5 வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டதாகவும், அதன்பின்னர் தான் கைதி, விக்ரம் படங்கள் LCU-ன் கீழ் இணைந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், லியோ உருவாகும் போது LCU ஐடியா பற்றி விஜய்யிடம் பேசினாராம் லோகேஷ்.
அதற்கு விஜய் எந்த தயக்கமும் இல்லாமல் ஓக்கே சொன்னதாகவும், இருப்பினும் LCU-ஐ பெரிதாக கொண்டு வராமல், விஜய்யின் பார்த்திபன் கேரக்டரை மட்டுமே வைத்து இந்த கதையை எழுதியதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல், லியோவில் ஃபிளாஷ்பேக் காட்சிகளை மன்சூர் அலிகான் தான் கூறியுள்ளார். அது விஜய்யின் சைடில் இருந்து சொல்லும் போது வேறுமாதிரியாக இருக்கும். அதனை லியோ 2வில் பார்க்கலாம் எனவும், விஜய் அனாதை இல்லத்தில் வளர்ந்ததாக சொல்லப்பட்ட கதையில், விக்ரம் படத்தின் ஃபஹத் கேரக்டர் ரெஃபரன்ஸ் இருப்பதாகவும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனால், இப்போது லியோ 2ம் பாகம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கைதி 2, விக்ரம் 2 இரண்டு படங்களும் வெளியான பின்னர் லியோ 2ம் பாகம் உருவாகும் எனவும் லோகேஷ் கூறியுள்ளார். அதேபோல், லியோ 2ம் பாகம், விக்ரம் 2 உடன் கனெக்ட் ஆகும் என்பதையும் ஓபனாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் LCU படங்களில் ஜார்ஜ் மாரியானின் நெப்போலியன் கேரக்டர் கண்டிப்பாக இருக்கும் என்பதையும் ஓபனாக கூறியுள்ளார்.