விஜயின் தலையீட்டால், டென்ஷனில் லோகேஷ் கனகராஜ்!
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அதிக குளிர்காரணமாக விஜய்க்கு காய்ச்சல் கூட ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜயினுடைய வீடு மற்றும் பிரசாத் ஸ்டுடியோவில் மட்டுமே நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த படத்தில் லோகேஷுக்கு மிகப் பெரிய தலைவலி விஜயால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது லோகேஷின் முந்தைய படங்களான கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில், யாருடைய தலையீடும் இருக்கவில்லை. ஆனால் லியோ படத்தில் விஜயின் அறிவுறுத்தலுக்கு அமைய சில விடயங்களில் மாற்றங்களை செய்துள்ளாராம்.
அதாவது, லோகேஷ் கனகராஜின் ஸ்டைலாக கருதப்படும் இரவு காட்சிகளை லியோ படத்தில் பெருமளவு எடுக்காமல் பகலிலேயே இயக்குமாறு விஜய், லோகேஷிடம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவிக்காத லோகேஷ், விஜய் சொன்னதை போல கதையில் சில மாற்றங்களை செய்தார்.
தற்போது லாங் ஷாட், மற்றும் சேசிங் சீன்களை எடுக்க வெளியில் செல்ல விஜய்யிடம் லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார். ஆனால் இதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துள்ளதால் லோகேஷ் கனகராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகிறார்.
லியோ படத்தில் விஜய்யின் தலையீடு அதிகமாக உள்ளதால், இப்படம் லோகேஷ் கனகராஜ் நினைத்தது போல வருமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.