தலைவரின் இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்…லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி பட சூட்டிங் முடிந்து இறுதி கட்ட பணிகள் தொடங்க இருக்கிறது. இதற்கு கிட்டத்தட்ட மூன்று மாத காலம் எடுக்கும்.
அதன் பிறகு சன் பிக்சர்ஸ் பிரமோஷனை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறது. அதேபோல் இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கப் போகிறது.
அது மட்டும் இன்றி லியோ படத்தில் விட்டதை கூலி மூலம் நிறைவேற்றிக் கொள்ள லோகேஷ் நினைத்துள்ளார். அதனால் கோலிவுட்டின் முதல் 1000 கோடி டார்கெட்டை இப்படம் தட்டும் என தெரிகிறது.
இந்நிலையில் லோகேஷ் ஒரு நிகழ்ச்சியில் தலைவரின் 2 படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ஆறிலிருந்து அறுபது வரை, தர்மத்தின் தலைவன் ஆகியவை ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட் படங்களாகும்.
இரண்டிலும் ரஜினி வெரைட்டி காட்டி இருப்பார். சென்டிமென்ட், மாஸ் காட்சிகள் என ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும். அந்த படங்களை பற்றி பேசினால் லோகேஷ் 2k கிட்ஸ் கண்டிப்பா இந்த படத்தை பாருங்க.
தலைவரின் இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எமோஷனலா கனெக்ட் ஆகி இருக்கும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். அப்ப கூலி படத்துல இந்த மாதிரி ரஜினிய பார்க்கலாமோ