லோகேஷ் கனகராஜின் 7ஆவது படம் குறித்த மாஸ் தகவல் வெளியானது

லோகேஷ் கனகராஜின் 7ஆவது படம் குறித்த மாஸ் தகவல் வெளியானது
  • PublishedNovember 26, 2025

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு என்னதான் நெகடிவ் கமென்ஸ் வந்தாலும் அவருடைய படங்கள் எப்போதுமே தனித்துவமாக இருக்கும்.

மக்களுக்கும், இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்துப்போகும் படமாகவே இருக்கும்.

அந்த வகையில் லோகேஷை வெளிக்கொண்டு வந்த படம் என்றால் அது கைதி தான்.

தற்போது லோகி தன் அடுத்த படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

கூலி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் கார்த்தியை வைத்து கைதி – 2 திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால், நடிகர் கார்த்தி இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் படத்தில் நடிக்கச் சென்றார். இதனால், இப்படம் கைவிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் துணை இயக்குநர் ஒருவர் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “எல்கே 7 அணி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 7ஆம் திரைப்படத்தின் இயக்குநர் அணி என்பது புரிந்தாலும் அந்த 7-வது படம் கைதி – 2 படமா இல்லை வேறு திரைப்படமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *