மாரி செல்வராஜுக்கு உதயநிதி கொடுத்த அன்பு பரிசு!

மாரி செல்வராஜுக்கு உதயநிதி கொடுத்த அன்பு பரிசு!
  • PublishedJuly 2, 2023

பரியேறும் பெருமாள்,  கர்ணன் போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜின் இயக்கத்தில் தற்போது மாமன்னன் படம் வெளியாகி இருக்கிறது.

உதயநிதியின் கடைசி படமாக இருக்கும் இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்நிலையில், இரண்டாவது நாளில் 4 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.

இருப்பினும் தன்னுடைய கடைசி படத்தை மறக்க முடியாத அளவுக்கு இயக்கி கொடுத்த மாரி செல்வராஜுக்கு உதயநிதி தற்போது காஸ்ட்லியான ஒரு பரிசை கொடுத்து அசத்தி இருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் உதயநிதி இயக்குனருக்கு மினி கூப்பர் கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார். அதன் விலையே கிட்டத்தட்ட 40 முதல் 45 லட்சம் வரை இருக்கும்.

இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு கொடுத்து மாமன்னன் குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *