இலங்கையில் கால்பதித்தது “லைகா”.. முதல் படம் என்ன தெரியுமா?

இலங்கையில் கால்பதித்தது “லைகா”.. முதல் படம் என்ன தெரியுமா?
  • PublishedAugust 22, 2023

லைகா நிறுவனம் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்ஸன் நிறுவனத்தை இலங்கையில் இன்று அங்குரார்பணம் செய்கின்றது.

இந்த அங்குரார்பண நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலில் இன்றிரவு மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை சினிமாக்களை தயாரிக்கும் நோக்கில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனம் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்ஸன் நிறுவனத்தை இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்துள்ள நிலையில், அதன் முதல் திரைப்படம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது.

அந்த வகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு “லசித் யோக்கர் கிங்” என பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *