மாதவன் மனதில் இருக்கும் மிகப்பெரிய வருத்தம்??

மாதவன் மனதில் இருக்கும் மிகப்பெரிய வருத்தம்??
  • PublishedMarch 29, 2025

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படம் ‘டெஸ்ட்’. இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாதவன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, நான் பெற்ற தேசிய விருதை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை.

தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் இருந்ததால், யாரும் அதை முழுமையாக உரிமை கோரவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. முதலில் இது எனக்கு சிறிது வருத்தம் அளித்தது.

 

பின்னர் நான் ஏன் படம் இயக்குகிறேன் என்கிற கேள்வியை என்னிடமே கேட்டுக் கொண்டேன். என் மனதில் ஒரு கதை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பதை உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *