ரவீந்தருக்கு ஆறு அடி பரிசுடன் சேர்ந்து வந்த ஆப்பு! சிக்கினான் சிவனாண்டி

ரவீந்தருக்கு ஆறு அடி பரிசுடன் சேர்ந்து வந்த ஆப்பு! சிக்கினான் சிவனாண்டி
  • PublishedJuly 11, 2023

பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது கணவருக்கு பிறந்த நாளை முன்னிட்டு ஆறு அடி சிறப்பு பரிசையும் கொடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஆச்சரியப்படுத்தினார்.

ரவீந்தர் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு நூதன முறையில் செய்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரவீந்தர், கிளப் ஹவுஸ் என்ற செயலி மூலம் அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் உடன் நெருங்கி பழகி அவரிடம் நூதன முறையில் பண மோசடியை மேற்கொண்டுள்ளார்.

இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பண மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர். அமெரிக்கா வாழ் இந்தியரான விஜய் என்பவர் ஆன்லைன் மூலமாக அளித்த புகாரியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் ரவீந்தர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அதாவது அமெரிக்காவை சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என 20 லட்சம் ரூபாயை கடனாக கேட்டிருக்கிறார். உடனே அவர், ‘என்னிடம் 20 லட்சம் இல்லை, 15 லட்சம் தான் இருக்கிறது’ என சொன்னதும் அந்த 15 லட்சத்தையாவது தாருங்கள் என்று ரவீந்தர் அதை இரண்டு தவணையாக வாங்கி இருக்கிறார்.

அந்த முழு பணத்தையும் ஒரே வாரத்தில் 16 லட்சம் ஆக கொடுத்து விடுகிறேன் என்ற உத்திரவாதத்தை விஜய்க்கு அளித்து அந்த பணத்தை பெற்று இருக்கிறார். ஆனால் ஒரு வாரம் முடிந்தும் பணத்தை தராமல் ரவீந்தர் இழுத்தடித்துள்ளார். தொடர்ந்து ரவீந்தரிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டதற்கு வங்கி விடுமுறை என்றும், செக் அனுப்புகிறேன் என்றும் காலம் தாழ்த்தியதால் ஒரு கட்டத்தில் விஜய்யின் செல்போன் நம்பரை ரவீந்தர் பிளாக் செய்து விட்டாராம். இதைப் பற்றி விஜய்யின் மனைவி ரவீந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் தன்னிடம் ரவீந்தர் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டபோது பேசிய ஆடியோ, வங்கி பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை இணைத்து சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார்.

இந்த புகாரை குறித்து ரவீந்தரிடம் கேட்டபோது, தான் விஜய்யிடம் இருந்து 15 லட்சம் வாங்கியது உண்மைதான். ஆனால் இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டு வருவதற்கு முடியாமல் விஜய் தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும் விஜய்யின் உறவினர் வந்தால் பணம் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *