திடீரென விலகிய மகாநதி சீரியல் நடிகை… அவருக்கு பதில் சன் டிவி சீரியல் நடிகையா?

திடீரென விலகிய மகாநதி சீரியல் நடிகை… அவருக்கு பதில் சன் டிவி சீரியல் நடிகையா?
  • PublishedFebruary 28, 2024

மாடல் அழகியான லட்சுமி பிரியா, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அவர் எதிர்பார்த்தபடியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் யோகிபாபுவின் பன்னிக்குட்டி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அவர் நடித்த ரோட், சிம்புவின் பத்து தல மற்றும் சுனைனா உடன் ட்ரிப் ஆகிய படங்களும் சொதப்பியதால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

நடிகை லட்சுமி பிரியா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் சந்திரகாந்தம் என்கிற தொடரிலும் நடித்து வந்தார்.

அந்த தொடரில் நந்தா என்கிற கேரக்டரில் நடித்து வந்த லட்சுமி பிரியா தற்போது அதில் இருந்து திடீரென விலகி உள்ளார். அவர் விலகியதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

லட்சுமி பிரியா விலகியதும் அந்த சீரியலில் அவருக்கு பதிலாக மான்சி என்பவர் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இவர் வேறு யாருமில்லை, சன் டிவியில் ஷபானா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.

அவர் தான் தற்போது சந்திரகாந்தம் என்கிற மலையாள தொடரில் நந்தா என்கிற கேரக்டரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

சந்திரகாந்தம் சீரியலில் இருந்து விலகிய லட்சுமி பிரியா, இனி தொடர்ந்து மகாநதி சீரியலில் மட்டும் நடிக்க முடிவெடுத்து உள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *