ஆஸ்கர் 2026 போட்டியில் குதித்த மஹாவதார் நரசிம்மா

ஆஸ்கர் 2026 போட்டியில் குதித்த மஹாவதார் நரசிம்மா
  • PublishedNovember 28, 2025

2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் பரிசீலனையில் உள்ள 35 அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) வெளியிட்டுள்ளது.

இதில், இந்தியாவின் புராண அனிமேஷன் திரைப்படமான ‘மஹாவதார் நரசிம்மா’, 98வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் பந்தயத்தில் நுழைந்து உலக அரங்கில் முத்திரை பதித்துள்ளது.

அஸ்வின் குமார் இயக்கி, ஷில்பா தவான் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ள மஹாவதார் நரசிம்மரின் கதையைப் பின்பற்றுகிறது.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களை அடிப்படையாகக் கொண்ட, திட்டமிடப்பட்ட ஏழு பாகங்கள் கொண்ட மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பாகம் இந்த அனிமேஷன் திரைப்படம். இந்தத் திரைப்படம் தற்போது நெட்ஃபிக்ஸில் ஒளிபரப்பாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *