இலங்கையில் மஹிந்த ராஜபக்சேவை சந்திக்கும் விஜய்?

இலங்கையில் மஹிந்த ராஜபக்சேவை சந்திக்கும் விஜய்?
  • PublishedFebruary 9, 2024

நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இதற்காக வெங்கட் பிரபு பறந்து பறந்து லொகேஷன் தேடுகின்றார்.

இதற்காக அண்மையில் இலங்கையிலும் அவர் முகாமிட்டிருந்தார். மேலும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு வருவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக வெங்கட் பிரபுவின் தங்கை உயிரிழந்ததால் படப்பிடிப்பு சற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

எனினும் தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜயின் இலங்கை விஜயம் குறித்தும் பேசப்படுகின்றது.

தற்போது GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அந்த வகையில், படப்பிடிப்பிற்காக இலங்கை செல்ல இருக்கும் விஜய்யுடன் மஹிந்த ராஜபக்சே சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த செய்தி எந்த அளவிற்கு சரியான தகவல் என தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *