தெலுங்கில் வெளியாகும் மாமன்னன் திரைப்படம்!

தெலுங்கில் வெளியாகும் மாமன்னன் திரைப்படம்!
  • PublishedJuly 8, 2023

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,  வடிவேலு நடித்துள்ள மாமன்னர் திரைப்படம்  பலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது மற்றும் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் வெற்றியை பாராட்டி ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் மினி கூப்பர் காரை பரிசாகப் பெற்றார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

இந்நிலையில் இந்த படம்   தெலுங்கில் ‘நாயகுடு’ என்ற பெயரில் ஜூலை 14-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

மேலும்  படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குனர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *