குறிப்பாக கேரளாவில் யாருக்கும் நான் அந்நியமானவள் அல்ல…மஞ்சு

குறிப்பாக கேரளாவில் யாருக்கும் நான் அந்நியமானவள் அல்ல…மஞ்சு
  • PublishedMarch 31, 2025

மலையாள சினிமாவில் சிறந்த நாயகியாக வலம் வருபவர்களில் ஒருவர் தான் மஞ்சு வாரியர்.

திருமணம், குழந்தை என ஆன பிறகு ஒருவர் நாயகியாக நடிக்க முடியாது, சாதிக்க முடியாது என்ற பேச்சுகள் உள்ள நிலையில் அதனை உடைத்து வெற்றிக்கண்டு வருகிறார். 46 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு மிகவும் டப் கொடுத்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் கடந்த மார்ச் 27ம் தேதி எம்புரான் திரைப்படம் வெளியாகி மாஸ் வெற்றிநடைபோட்டு வருகிறது.

எம்புரான் படத்தின் ஒரு பேட்டியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் புகழ் உங்களை மக்களிடமிருந்து ஒதுக்கி வைக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும், அதுதான் நான்.

குறிப்பாக கேரளாவில் யாருக்கும் நான் அந்நியமானவள் அல்ல, யார் வீட்டையும் தட்டி என்னால் தண்ணீர் கேட்டு வாங்கி குடிக்க முடியும். ஏன் என்று கேள்வி கேட்ட மாட்டார்கள், எந்த சந்தேகமும் பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *