பொங்கல் வின்னராக மகுடம் சூடிய “மத கஜ ராஜா” அப்படி என்ன இருக்கு படத்துல?

பொங்கல் வின்னராக மகுடம் சூடிய “மத கஜ ராஜா” அப்படி என்ன இருக்கு படத்துல?
  • PublishedJanuary 15, 2025

2013ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எனினும் சட்ட மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

ஒருவழியாக 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 12-ம் தேதி இந்த படம் வெளியானது. படம் வெளியானது முதல் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் சந்தானம் தான். படம் முழுக்க அதிகமாக ஸ்கோர் செய்திருப்பதும் சந்தானம். எனினும் மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் என படத்தில் அனைவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பதால் படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. சுந்தர் சி படம் என்றால் சிரிப்புக்கு கேரண்டி என்பது இந்த படம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

மதகதராஜா வெளியான 3 நாளில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதல் 2 நாளில் ரூ.6 கோடி வசூல் செய்த இந்த படம் 3வது நாளான நேற்று மட்டும் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த படம் இதுவரை ரூ.12.50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால் இந்த படம் இந்த வாரத்தின் இறுதியில் ரூ.50 கோடி வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபறம் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான வணங்கான் படம் இதுவரை சுமார் 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே விஷ்ணு வர்தனின் நேசிப்பாயா, ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படங்களும் சுமாரான வசூலை பெற்றுள்ளதால் மத கஜ ராஜா படம் பொங்கல் வின்னராக மாறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *