அந்த ஒரே ஒரு பாடல் தான்… நாலு பேர் வாழ்க்கையும் நாசம் தான்…

அந்த ஒரே ஒரு பாடல் தான்…  நாலு பேர் வாழ்க்கையும் நாசம் தான்…
  • PublishedMay 15, 2024

தனுஷ் படங்களை எடுத்துக் கொண்டால் ஒரு சில படங்கள் சூர மொக்கையாக இருந்தாலும் அதில் பாட்டுகள் சூப்பர் ஹிட் அடித்து விடும்.

தனுஷ் பட பாடல்கள் லிஸ்ட் என்று தனியாக கேட்க ஆரம்பித்தால் அன்றைய நாள் எப்படி போகுது என்றே தெரியாது.

அந்த வரிசையில் கேட்ட உடனேயே கலங்க வைக்கும் பாட்டு என்றால் மயக்கம் என்ன படத்தில் வரும்’ பிறை தேடும் இரவிலே எதை தேடி அலைகிறாய்’ பாடல் தான்.

இந்தப் பாட்டில் இருக்கும் இன்னொரு விஷயத்தை நோட் பண்ணினால் தான், அட அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லப்பா அப்படின்னு தோணும். இந்தப் பாட்டுல வேலை செஞ்ச நாலு பேருமே தங்கள் திருமண வாழ்க்கையில் தோற்றவர்கள் என்பதுதான் அந்த விஷயம்.

படத்தின் இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வால் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து ஆனவர். அதைத் தொடர்ந்து படத்தின் ஹீரோ தனுஷ் 18 வருட கால திருமண வாழ்க்கையை சமீபத்தில் தான் முடிவுக்கு கொண்டு வந்தார்.

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு விட்டார். பாட்டு பாடிய சைந்தவி சைலன்டாக ஜிவி பிரகாஷ் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *