ஸ்ருதி ஹாசனுடன் படு ரொமான்ஸ்.. மனைவி பற்றி பேசியதால் கடுப்பான லோகேஷ்

ஸ்ருதி ஹாசனுடன் படு ரொமான்ஸ்.. மனைவி பற்றி பேசியதால் கடுப்பான லோகேஷ்
  • PublishedMarch 26, 2024

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர். இதுவரை இயக்கிய படங்களில் லியோ படம் மட்டும்தான் அவருக்கு சுமாரான ஹிட்டை கொடுத்திருக்கிறது. மற்ற அனைத்து படங்களுமே அவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்றன.

அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவிருக்கும் அவர் தற்போது “இனிமேல்” என்ற ஆல்பம் பாடலின் மூலம் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் அவரது மனைவி குடும்பம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு லோகேஷ் காண்டாகி பதிலளித்திருக்கிறார்.

நேற்று இனிமேல் ஆடியோ லான்ச்சை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள் லோகேஷும், ஸ்ருதி ஹாசனும். அப்போது லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர் ஒருவர்,

“ஸ்ருதியுடனான ரொமான்ஸ் குறித்து லோகேஷின் மனைவி என்ன சொன்னார் என்பதை தெரிந்துகொள்வதற்காக, உங்களின் மனைவி உங்களை இயக்குந்ராக பார்த்துவிட்டார். நடிகராக எப்படி பார்க்கிறார்” என்ற லோகேஷிடம் சுற்றி வளைத்து கேட்டார்.

அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்விகளை ஆரம்பத்திலிருந்தே நான் ஒதுக்கிவருகிறேன். அதை பற்றி இனிமேலும் பேச விரும்பவில்லை. ஏனெனில் நான் சினிமாவுக்குள் வரும்போதே அது வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கும் உங்களுக்கும் நேரடி தொடர்பு இருக்க வேண்டும். பாராட்டுவது, விமர்சிப்பது என எதுவாக இருந்தாலும் நமக்குள்ளான தொடர்பே போதும். எனது வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியக்கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *