தொடர் சர்ச்சைகளை சந்தித்து வரும் மில்லர் திரைப்படம் : தனுஷால் ஏற்பட்ட தலைவலி!
வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். இப்படம் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் ப்ரொடக்ஷனில் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என நம்பப்பட்ட நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பில் தொடர்ந்து வரும் பிரச்சனையால் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இது ஒரு புறம் இருக்க திரும்பிய பக்கம் எல்லாம் சிக்கல் ஏற்பட்டு தயாரிப்பாளருக்கு வேதனையை உண்டு படுத்து வருகிறது. இப்படத்தை ஆரம்பிக்கும் போதே தனுஷ் வந்து செல்ல இனோவா கார் வழங்கப்பட்டதாம்.
அதை விரும்பாத தனுஷ் தனக்கு ஒரு பெரிய ஆடம்பர கார் தான் வேண்டும் என்று பிரச்சனையை ஆரம்பித்துள்ளார். இப்பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு ஷூட்டிங்கை மேற்கொண்ட படக்குழுவினருக்கு இதைவிட பெரிய பிரச்சனை ஒன்று காத்திருந்தது.
அதாவது இப்படத்தின் கதைக்கு ஏற்ப பல காட்சிகளில் குண்டு வெடிப்பது போல காட்டப்பட வேண்டுமாம். இதைத் தொடர்ந்து மதுரையில் சூட்டிங் மேற்கொண்ட படக் குழுவினர் ஏற்படுத்திய குண்டு வெடித்தல் போன்ற காட்சி அங்கு சுற்றி உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் பிரச்சனையை உருவாக்கியது.
இது போன்ற தொடர் பிரச்சினைகளால் படப்பிடிப்பு தாமதம் ஆகுவதால் தயாரிப்பாளர் தரப்பில் வேதனையை ஏற்படுத்தி வருகிறதாம்.