இலங்கை நாடாளுமன்றத்தில் பிரபல நடிகர் மோகன்லால்

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரபல நடிகர் மோகன்லால்
  • PublishedJune 19, 2025

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் இலங்கை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டுள்ளார்.

படப்படிப்பு ஒன்றுக்காக நடிகர் மோகன்லால் சமீபத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நிலையில், இன்று (19) இலங்கை நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

சமீப காலமாக பல்வேறு தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்தனர்.

இந்தியாவின் கொச்சியிலிருந்து UL-166 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கவை அவர்கள் வந்தடைந்தனர்.

‘பேட்ரியட்’ (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர்கள் இலங்கை வந்திருந்தார்.

இந்நிலையில், மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *