ரஜினி பட டைட்டிலுடன் வெளியானது லோகேஷின் அடுத்த பட ப்ரோமோ
லோகேஷ் இப்போது சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் இவர் புது முகங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது youtube பிரபலமான பாரத் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. இப்படத்தை லோகேஷ் உடன் இணைந்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
இதன் ப்ரோமோ தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. வழக்கம்போல பாரத் தன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.