முபாசா – தி லயன் கிங்.. அட்டகாசமான ட்ரெய்லர் வெளியானது

முபாசா – தி லயன் கிங்.. அட்டகாசமான ட்ரெய்லர் வெளியானது
  • PublishedAugust 13, 2024

அனிமேஷன் திரைப்படமான லயன் கிங் இதுவரை இரண்டு படங்களாக வெளியாகியிருக்கிறது. சிறுவர்கள், சிறுமிகள் மத்தியில் மிகப்பிரபலமான அந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் அடுத்ததாக முபாசா – தி லயன் கிங் படம் வெளியாகவிருக்கிறது. அதன் ட்ரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்தாலும்; அதன் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.

இதிலும் அனிமேஷன் காட்சிகள் ரொம்பவே தத்ரூபமாக இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் முபாசாவின் சிறு வயது காலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *