என் ஓட்டு விஜய்க்குத்தான்… ஆல்யா மானசா அசத்தல் பதில்
நடிகர் விஜய் சேர்த்துள்ள சொத்துக்களில் முக்கியமானது அவரது வெறித்தனமான ரசிகர்கள்தான். அடுத்தடுத்து படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் விஜய், கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தன்னுடைய அரசியில் என்ட்ரியை அறிவித்திருந்தார். அத்துடன் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருத்துள்ளார்.
அவரது அரசியல் என்ட்ரி மிகப்பெரிய கவனத்தையும் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றாலும், ஏன் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
எம்ஜிஆர் உள்ளிட்ட பல பிரபலங்களும் அரசியலில் இருந்துக் கொண்டே சினிமாவிலும் நடித்த நிலையில், விஜய்யின் சினிமாவிலிருந்து விலகும் முடிவு ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தன்னுடைய ஓட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத்தான் என்று தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக செயல்பட நேரம் இருக்காது என்று கூறியுள்ள ஆல்யா ஆனால் தன்னுடைய ஓட்டை விஜய்க்குதான் போடுவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது போன்ற வெறித்தனமான பல ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார் விஜய். அவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெருகி வருவது இவர்களின் இத்தகைய பேச்சுக்களால் வெளிப்பட்டு வருகிறது. அவரது அரசியல் என்ட்ரி சிறப்பாக அமையுமா என்பது 2026ல் தெரியும்.