காதலர் தினத்தில் காதலை கூறிய நாகசைதன்யா… ஷாகிங் வீடியோ

காதலர் தினத்தில் காதலை கூறிய நாகசைதன்யா… ஷாகிங் வீடியோ
  • PublishedFebruary 14, 2024

சமந்தா – நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட போதும், இருவருடைய இரண்டாம் திருமணம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகிறது.

சமந்தாவிற்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க, அவருடைய பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாகவும், குடும்பத்தில் கொடுக்கும் அழுத்தம் காரணமாக சமந்தா இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதே போல் நாகசைதன்யாவின் வீட்டில் இரண்டாம் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும், தனது மகனின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது உறவினர் பெண்ணை, நாகசைதன்யாவிற்கு திருமணம் செய்து வைக்க நாகர்ஜுனா முடிவு செய்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால், இந்த அனைத்து தகவல்கள் குறித்து அவரவர் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகசைதன்யா தற்போது தண்டல் (Thandel) எனும் திரைப்படத்தில் இரண்டாவது முறையாக சாய் பல்லவியுடன் இணைந்து நடித்து வருகிறார். காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இன்று காதலர் தினம் என்பதால், தங்களுடைய படத்தின் சார்பில் நாகசைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து வீடியோ ஒன்று செய்துள்ளனர்.

இதில் சாய் பல்லவியிடம் படத்தில் வரும் அவருடைய காதலனாக ரொமான்டிக்காக பேசுகிறார் நாகசைதன்யா. இதற்கு சாய் பல்லவி கொடுக்கும் க்யூட் ரியாக்ஷன்ஸ் ரசிகர்களை கவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *