நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின…

நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகின…
  • PublishedDecember 4, 2024

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதோடு, நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜூனா மணமக்களை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் அவர்களது திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

திருமணம் குறித்து நாகர்ஜூனா கூறியிருப்பதாவது: இந்த அழகான அற்புதத்தை இருவரும் ஒன்றாக தொடங்குவதை பார்ப்பது என்பது எனக்கு ஒரு உணர்சிகரமான தருணமாக இருந்தது. எனது அன்பான சாய்க்கு வாழ்த்துக்கள். சோபிதா நீங்கள் எங்களது வாழ்க்கையில் ஏற்கனவே மகிழ்ச்சியை கொண்டு வந்துவிட்டீர்கள்.

அக்கினேனி நாகேஸ்வர ராவின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட ANR (Akkineni Nageswara Rao) காருவின் திருவுருவ சிலையின் ஆசீர்வாதத்தின் கீழ் இந்த அற்புதமான கொண்டாட்டம் வாழ்க்கையில் ஆனந்தத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவரது அன்பும் ஆசியும் வழிகாட்டுதலும் நம்முடன் இருப்பதாகவே நான் உணர்கிறேன். இன்று பொழிந்திருக்கும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *