ஐஸ்வர்யா ராய் வழியில் சென்ற நாகர்ஜுனா : உயர் நீதிமன்றம் கொடுத்த உறுதி

ஐஸ்வர்யா ராய் வழியில் சென்ற நாகர்ஜுனா : உயர் நீதிமன்றம் கொடுத்த உறுதி
  • PublishedSeptember 25, 2025

நடிகர் நாகர்ஜுனா தனது தனியுரிமை பாதுகாக்க கோரி தொடர்ந்த வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

போலியான இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் உரிய அனுமதி இல்லாமல் புகைப்படம் வீடியோ பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாக நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் புகைப்படம் ,பெயர், வீடியோ உள்ளிட்டவற்றை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தனியுரிமை பாதுகாக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி தேஜஸ் கரியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நாகர்ஜுனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், நாகர்ஜுனா தெலுங்கு பட உலகில் மிகப் பிரபலமான நடிகர் இவரின் புகைப்படம் மற்றும் இவருடைய பெயர் தவறாக இணையதளத்தில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக சில இணைய பக்கத்தில் நாகர்ஜுனாவின் படம் போடப்பட்டிருக்கும் அதனை கிளிக் செய்தால் அது ஆபாச இணையதளத்துக்கு செல்கிறது. அதேபோல சில ஆடை விளம்பரங்கள் கூட இவரின் புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன மேலும் AI மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் சில விளம்பரங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

டி-ஷர்ட் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து அதனை விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தனது தனியுரிமையை பாதிப்பதாக உள்ளது என வாதிடப்பட்டுள்ளது. வாதங்களைக் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இவ்வழக்கில் உரிய உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *