மாதவனுடன் புத்தாண்டை வரவேற்ற நயன் – எந்த நாட்டில் தெரியுமா?
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியர், நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி, சரிதா பிர்ஜேவுடன் இணைந்து 2025ஐ வரவேற்றுள்ளனர்.
நயன் – விக்கி தம்பதியர்களுக்கு அதிகம் பிடித்த, மேலும் அதிகம் சௌகரியமான வெளிநாடு என்றால் அது, துபாய்தான். இங்கு, இவர்கள் தங்களது குழந்தைகளுடன் அடிக்கடி சென்று நேரம் செலவிடுவார்கள்.
தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் வந்தபோது கூட இவர்கள் துபாய்க்குத்தான் சென்றார்கள். இதுமட்டும் இல்லாமல், தங்களது குழந்தைகளுடன் இவர்கள் அடிக்கடி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதாலோ என்னவோ, நயன் அதிகமாக படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம்கூட வெளிவரவில்லை. தற்போது ராக்காயி மற்றும் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் மலையாளப்படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். விக்னேஷ் சிவன் எல்.ஐ.கே என்ற படத்தினை இயக்கி வருகின்றார்.
இப்படியான நிலையில், நடிகை நயன் – விக்கி தம்பதியர் 2025ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். இவர்கள், நடிகர் மாதவன் – சரிதா பிர்ஜே தம்பதியுடன் இணைந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்களை நயன் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் நயன், விக்கியை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு உள்ளார். ஒரே போர்வையைப் போர்த்திக் கொண்டு இருவரும் அமர்ந்திருக்கின்றனர்.