நயன்தாராவை விளாசிய மருத்துவர்… பட்டென இன்ஸ்டா பதிவை டெலிட் செய்த நயன்
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைகிறது பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப் பார்த்த கல்லீரல் மருத்துவர் பிலிப்ஸ் நயன்தாரா சொல்வது பொய் அப்படி அந்த செம்பருத்தி பூவில் எந்த மருத்துவ குணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செம்பருத்தி டீ குடிப்பது உடம்புக்கு நல்லது, நான் தினமும் செம்பருத்தி டீயை குடித்து வருகிறேன்.
மேலும் செம்பருத்தி டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ள அவர், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை குறைகிறது. இந்த டீயை தனக்கு பரிந்துரை செய்த ஜீனியஸை டேக் செய்து, ரெசிபி வேண்டுமானால் அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.
நயன்தாராவின் இந்த பதிவினைப் பார்த்த கல்லீரல் மருத்துவர் பிலிப்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாரா சொல்வது போல, செம்பருத்தி பூவில் ஆரோக்கிய நன்மைகள் எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ஹைபிஸ்கஸ் பூவில் சப்டாரிஃபா என்ற குறிப்பிட்ட வகை ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி அதில், ஆரோக்கிய நன்மைகள் இல்லை.
அப்படி இருக்கும் போது நயன்தாரா, செம்பருத்தி டீயை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைக்கு நல்லது. ஃபளூவில் இருந்து காக்கிறது என கூறியிருக்கிறார். நயன்தாரா, செம்பருத்தி டீ சாப்பிடுங்கள், அது நன்றாக இருக்கும் என்று சொன்னது நிறுத்தி இருக்கலாம். ஆனால், உடல்நலம் பற்றிய தனக்கு தெரியாத தகவலை, இன்ஸ்டாகிராமில் 8.7 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் நயன்தாரா எப்படி தவறான தகவல் கொடுக்கலாம்.
உண்மையில், செம்பருத்தி டீ குடிப்பதால் ஆண்களின் testes பாதிக்கப்படும். மேலும் பெண்கள் அந்த டீயை தினமும் குடித்து வந்தால் பூப்பெய்வது தள்ளிப் போவது மட்டுமில்லாமல், குழந்தையின் எடையில் பிரச்சனை வரும். எனவே, ரீப்ரொடக்டிவ் வயதில் இருக்கும் ஆண்களும், பெண்களும் செம்பருத்தி டியை தினமும் குடிக்கக் கூடாது நல்லது அல்ல என கல்லீரல் மருத்துவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து செம்பருத்தி டீ குறித்த பதிவினை நீக்கி உள்ளார்.