நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரிவது உறுதி;பிரபல ஜோதிடரின் கணிப்பு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரிவது உறுதி;பிரபல ஜோதிடரின் கணிப்பு
  • PublishedJanuary 15, 2024

சமந்தா – நாகசைதன்யா பிரிந்து விடுவார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Youtube தளத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி கணித்துக் கூறி பிரபலமானவர் வேணு சுவாமி என்கிற ஜோதிடர்.

இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடிக்கு திருமணமான போதே, இவர்கள் இருவரும் சில வருடங்களில் பிரிந்து விடுவார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் எப்போதும் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆரம்பத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஜோடி மிகவும் சந்தோஷமான தம்பதிகளாக பார்க்கப்பட்டாலும் கூட, அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம் ஒரு கட்டத்தில் விவாகரத்தில் வந்து நின்றது. அப்போது இவர் ஏற்கனவே கணித்து கூறிய செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

இதைத் தொடர்ந்து தற்போது ஜோதிடர் வேணு சுவாமி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எதிர்காலத்தில் பிரிந்து விடுவார்கள் என கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளே… அவர்களின் பிரிவுக்கு காரணமாக அமையும் என்றும், நான் சொல்வது நடக்கவில்லை என்றால், ஜோதிடத்தை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *