நயன்தாராவின் ஆணவத்துக்கு கிடைத்த அடி… அவ்வளோ தானா?

நயன்தாராவின் ஆணவத்துக்கு கிடைத்த அடி… அவ்வளோ தானா?
  • PublishedDecember 25, 2023

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக இருந்தவர். இவர் நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அதன் பின் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்று எடுத்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் அன்னபூர்ணி.

இப்படம் தமிழகம் முழுவதும் ஷேர் ஆக வெறும் 85 லட்சம் தான் வந்துள்ளதாம். ஆனால், நயன்தாரா சம்பளம் மட்டும் இப்படத்திற்கு 10 கோடி என்று கூறப்படுகிறது.

நயன்தாரா மார்க்கெட் தற்போது அதளபாதளம் சென்றுள்ளது. அதோடு அவர் எந்த ஒரு ப்ரோமோஷனுக்கும் வராமல் இருப்பது தான் இதற்கு காரணம், அவரின் ஆணவத்துக்கு கிடைத்த அடி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் தமிழில் தான் இவர் இப்படி என்றால் ஹிந்தியிலும் இதே விளையாட்டை போடுகின்றார்.

இவர் நடிப்பில் வெளியான ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 1000 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை படைத்தது. இதன்போது ஷாருக்கான் வைத்த பார்ட்டியிலும் நயன் கலந்துகொள்ளவில்லை.

படத்தில் ஆடியோ லாஞ்சிலும் இவர் கலந்துகொள்ளவில்லை. மாறாக காணொளியூடாகவே பங்குபற்றியிருந்தார்.

ஆனால் அம்பானி வீட்டில் நடந்த ஆயுத பூஜைக்கு தம்பதிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *