நேகா சர்மா 21 நவம்பர் 1987 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் பாகல்பூர் எனும் இடத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் அஜித் சர்மா இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபர் மற்றும் பாகல்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். நேகா சர்மா தனது தந்தையாருக்காக தேர்தல் காலங்களில் பலமுறை பிரச்சாரம் செய்துள்ளார்.