உயர்ந்தது அஜித்தின் மவுசு… புதிய படத்தின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

உயர்ந்தது அஜித்தின் மவுசு… புதிய படத்தின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
  • PublishedJanuary 27, 2025

2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டு அஜித்துக்கு அளவு கடந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து வருகிறது. 2024ல் அஜித் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று அடுத்தடுத்து 2 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

இது ஒரு புறம் இருந்தாலும் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது. கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்து கொடுத்த போது அஜித் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

துள்ளிக் குதித்து கொண்டாடி மகிழ்ந்தார். இதையடுத்து குடியரசுத் தினத்திற்கு முன்னதாக அஜித்திற்கு நாட்டின் உயரிய விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்திற்கு அஜித்துக்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *