‘என் 15 வருட கனவு நிறைவேறியது” நிரோஷா

‘என் 15 வருட கனவு நிறைவேறியது” நிரோஷா
  • PublishedFebruary 6, 2024

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி சிறப்பு வேடத்திலும், விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை வேடத்திலும் நடித்துள்ள படம் ‛லால் சலாம்’.

இவர்களுடன் ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பெப்ரவரி 9ல் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நிரோஷா,

‛‛இந்த மேடையில் இங்கு நிற்பதற்கும், ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கும் முதலில் ஐஸ்வர்யாவுக்கு நன்றி சொல்கிறேன்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அது நடக்காமல் போனது. அந்த சமயம் மிகவும் வருந்தினேன். இப்போது லால் சலாம் படத்தில் நடித்துள்ளேன்.

அதுவும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். என் 15 வருட கனவு நினைவேறியது. பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அதுவும் நடந்தது” என மகிழ்ச்சி உடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *