“அவன் எவ்ளோ கேவலமானவன்” பொங்கிய பிரபலம்
விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இதுநாள் வரை செம ஹிட் ஆனதா என்பது தெரியவில்லை, ஆனால் கடந்த வாரம் பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு நிகழ்ச்சி குறித்து பரபரப்பாக மக்கள் பேசி வருகிறார்கள்.
‘பிரதீப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது போல அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.
இதனிடையில் நிக்சன் போட்டியாளர்கள் குறித்து பேசிய விஷயங்களை பிக்பாஸ் எல்லா போட்டியாளர்களுக்கும் போட்டு காட்டி வருகிறார்.
நிக்சன், வினுஷாவை பார்த்து ஒரு பெண்ணுக்கு எது எது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எதுவுமே இல்லாத ஒரு பெண்ணாக வினுஷா இருக்கிறார் என பேசியது குறித்து வினுஷா பதிவு ஒன்று போட்டுள்ளார்.
வினுஷா தனது இன்ஸ்டாவில், முதல் வாரத்தில் நிக்சனுக்கும் எனக்கும் நல்ல விதமான பேச்சுவார்த்தைகள் இருந்து வந்தது.
அவனை ஒரு சகோதரன் போலத்தான் நினைத்து பழகி வந்தேன். என்னை கிண்டல் செய்து வந்த நிலையிலும், அவன் தவறான நோக்கத்தில் கிண்டல் செய்கிறான் என நினைக்கவில்லை.
ஆனால், அவன் என்னை பாடி ஷேமிங் பண்ணது பற்றி எனக்கு சுத்தமா தெரியாது. வெளியே வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் அவன் எவ்ளோ கேவலமானவன் என புரிகிறது என விளாசி உள்ளார்