நம்பர் நடிகைகளையே டீலில் விட்ட விவாகரத்து நடிகை! ஐயோ… வட போச்சே

நம்பர் நடிகைகளையே டீலில் விட்ட விவாகரத்து நடிகை! ஐயோ… வட போச்சே
  • PublishedApril 2, 2024

சின்ன நம்பர் நடிகைக்கும் பெரிய நம்பர் நடிகைக்கும் தான் எப்போதும் குழாயடி சண்டையாக இருக்கும். அதில் பெரிய நம்பர் தான் வெற்றிவாகை சூடி வந்தார்.

ஆனால் இப்போது அவரை சின்ன நம்பர் நடிகை ஓவர் டேக் செய்து விட்டார். தற்போது மாமியின் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. கிட்டத்தட்ட பெரிய நம்பர் நடிகையின் பட்டத்தை இவர் தட்டிப் பறித்து விட்டார் என்றே சொல்லலாம்.

ஆனால் போட்டிக்கு நானும் வரலாமா என களத்தில் குதித்திருக்கிறார் விவாகரத்து நடிகை. தற்போது மாமி நடிகைக்கு பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் தருவாயில் இருந்தது.

ஆனால் இப்போது பார்த்தால் அதை விவாகரத்து நடிகை சத்தம் இல்லாமல் ஆட்டையை போட்டு விட்டாராம். இதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே பிரம்மாண்ட இயக்குனரின் படங்களில் அவர் நடித்தது தான் என்கின்றனர்.

உடல்நல பிரச்சனையால் சிறிது காலம் பிரேக் எடுத்திருந்த நடிகை சமீபத்தில் கிக்கான போட்டோக்களை எல்லாம் வெளியிட்டார். அதுவே மற்ற நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்தது.

அதைத்தொடர்ந்து நடிகையும் தன்னுடன் நடித்த ஹீரோக்களுக்கு தூது விட்டு வந்தார். அதன் பலன் தான் தற்போது இந்த பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் அவர் இணைந்து இருக்கிறார்.

இதனால் பாவம் மாமி நடிகை தான் ரொம்பவும் அப்செட் ஆகி விட்டாராம். இப்படி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என விவாரத்து நடிகை மீது கொஞ்சம் கடுப்பிலும் இருக்கிறாராம்

கேரளாவில் மைதானத்தின் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் உடன் கிரிக்கெட் ஜாம்பவான் CSK தல தோனியும் சில காட்சிகளில் நடித்து உள்ளாராம். இந்த தகவலை பட குழு ரகசியமாய் வைத்துள்ளனராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *