என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிட்டாங்க… நிறைய ஏமாற்றியிருக்காங்க… ஓவியா கூறிய உண்மைகள்
நடிகை ஓவியா களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், சண்டமாருதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்ததில் ஒரு சில படங்கள் நல்ல ஹிட் ஆன படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார் ஓவியா. அந்த சீசனில் அவர் விளையாடிய விதம் பெரும் ட்ரெண்டானது. கேமராவை பார்த்து ஸ்ப்ரே அடித்திடுவேன் என சொன்னது, நடிகர் ஷக்தியிடம் எதற்கும் அஞ்சாமல் சண்டைக்கு சென்றது என அவரது நடவடிக்கையை பார்த்து ரசிகர்களாக மாறினர் மக்கள்.
மேலும் அவருக்கென்று ஓவியா ஆர்மியையும் நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் தொடங்கினர்.
இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரவ்வுடன் நெருக்கம் காட்டினார் ஓவியா. இதன் காரணமாக இரண்டு பேருக்கும் காதல் என்று பேசப்பட்டது. ஆனால் இருவருமே அது குறித்து பொதுவெளியில் பேசவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. காஞ்சனா 3, களவாணி 2, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் சரியாக போகவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் ஓவியா சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் பல விஷயங்கள் குறித்து பேசினார். குறிப்பாக ஓவியா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் அவர் தன் பாலின ஈர்ப்பாளர் என சிலர் பேசியதற்கு விளக்கம் அளித்த அவர்,
நான் தன் பாலின ஈர்ப்பாளர் எல்லாம் இல்லை. நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை என கூறினார். மேலும், ”ஆம் திருமணம் ஆகாமலேயே எனக்கு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை எனது நாய்க்குட்டி”என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் ஓவியா. பேட்டியில் பேசிய அவர்,
“நான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அதெல்லாம் எனக்கு செட் ஆகவில்லை. நான் உண்மையாகத்தான் இருந்தேன். அதேபோல் என்னை நிறைய பேர் யூஸ் பண்ணியிருக்கிறார்கள். பணம் விஷயத்தில் நிறையவே ஏமாற்றியிருக்கிறார்கள். அது எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்கத்தானே செய்யும்.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் சினிமா என்பது ஒரு தொழில் அவ்வளவுதான். அதற்காக நமது வாழ்க்கையை தொலைக்கக்கூடாது. யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பயப்படாமல் வெளியில் சொல்ல வேண்டும். 21ஆம் நூற்றாண்டில்கூட இந்த மாதிரியான விஷயங்கள் இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது””என்றார்.