“சினிமாவை விட்டு போக விரும்புகின்றேன்”… புஷ்பா பட இயக்குனர் அதிர்ச்சி
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 படமும் தற்போது பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புஷ்பா 2 சாதனை படைத்து வருகிறது. விரைவில் 2000 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை தொடுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
இதுஒருபக்கம் இருக்க அல்லு அர்ஜுன் தியேட்டர் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சர்ச்சை தான் பெரிய அளவில் பரபரப்பை தெலுங்கு சினிமா துறையில் ஏற்படுத்தி வருகிறது.
புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது சொன்ன விஷயம் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
எந்த ஒரு விஷயத்தை விட்டுவிட நினைக்கிறீர்கள் என தொகுப்பாளர் கேட்டதற்கு, ‘சினிமா’ என அவர் கூறி இருக்கிறார். அவர் சினிமாவை விட்டு விலக கூடாது என அருகில் இருந்த நடிகர் ராம் சரண் உட்பட பலரும் கூறி இருக்கின்றனர்.
https://x.com/ManozTalks/status/1871423856847827412