முதன்முறையாக தமிழில்… பிரதமர் ஆகிறார் சத்யராஜ்… மாஸ் அப்டேட்

முதன்முறையாக தமிழில்… பிரதமர் ஆகிறார் சத்யராஜ்… மாஸ் அப்டேட்
  • PublishedMay 18, 2024

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழில் திரைப்படம் உருவாக உள்ள நிலையில், அதில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அப்டேட் கசிந்துள்ளது.

அந்த வகையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இதுவரை ஏராளமான பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன. இந்தியில் விவேக் ஓபராய் நடிப்பில் பிஎம் நரேந்திர மோடி என்கிற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு பயோபிக் படம் ரிலீஸ் ஆனது.

இதுதவிர மன் பைரகி, மோடி ஜர்னி ஆஃப் காமன் மேன், நமோ சவுனே கமோ, மோடி ககா கா கவுன் என மோடியின் பயோபிக் படங்கள் இதுவரை ஏராளமானவை வந்துள்ளன.

அந்த வரிசையில் தற்போது புதிதாக தமிழில் மோடியில் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஒரு பயோபிக் படம் உருவாக உள்ளது. அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த பயோபிக்கில் மோடியாக, நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நடிகர் சத்யராஜ் இதற்கு முன்னர் பெரியாரின் பயோபிக்கில் நடித்திருந்தார். அதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *