சொந்த அண்ணனின் நயவஞ்சகத்தால் சிறுநீரகத்தை இழந்த பொன்னம்பலம்!

சொந்த அண்ணனின் நயவஞ்சகத்தால் சிறுநீரகத்தை இழந்த பொன்னம்பலம்!
  • PublishedMarch 15, 2023

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவருக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அவர் பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் அவருக்கு உதவி செய்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகனே தன் கிட்னியை கொடுத்து அவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினார். தற்போது இவர் உடல் நலம் தேறி வருகிறார்.பொன்னம்பலத்தின் சிறுநீரக பிரச்சினைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பியது.

பொன்னம்பலம் இதற்கு பதிலளிக்கும் விதமாக  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில்,  ‘ குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாக பலர் நினைத்தனர்.

ஆனால் அப்படி எதுவும் இல்லை. என் தந்தைக்கு நான்கு மனைவிகள். மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் பணிபுரிந்தார். நான் அவரை மிகவும் நம்பினேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அவனால் நன்றாக வாழ முடியவில்லை என்ற பொறாமையால் இதை அவர் செய்தார்’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *