பூர்ணிமாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. குவியும் பட வாய்ப்புகள்

பூர்ணிமாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்..  குவியும் பட வாய்ப்புகள்
  • PublishedJanuary 21, 2024

நடந்து முடிந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னர் என தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை மணி பிடிக்க மூன்றாவது இடத்தை மாயா மற்றும் நான்கு, ஐந்து இடங்களில் விஷ்ணு, தினேஷ் பிடித்தனர்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறினார். ரூ. 1 லட்சத்தில் இருந்து துவங்கிய இந்த சுற்று இறுதியாக ரூ. 16 லட்சம் வந்தது. இதன்பின் தொகை அதிகரிக்கவும் செய்யும், குறையவும் செய்யும் என பிக் பாஸ் அறிவித்தார்.

இந்த நிலையில், ரூ. 16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து கிளம்புவதாக பூர்ணிமா முடிவெடுத்தார். பணப்பெட்டி எடுத்ததன் காரணமாக பூர்ணிமாவிற்கு ரூ. 16 லட்சம் கிடைத்தது. இதுமட்டுமின்றி ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் என்ற சம்பள கணக்கில் 13 வாரத்திற்கு ரூ. 13 லட்சம் சம்பளமும் இவருக்கு கிடைத்துள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

மொத்தத்தில் ரூ. 29 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் பூர்ணிமா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே பூர்ணிமா கதாநாயகியாக நடித்த செவப்பி எனும் திரைப்படம் ஓடிடியில் வெளிவந்தது.

இந்நிலையில், அதை தொடர்ந்து மீண்டும் பூர்ணிமா கதாநாயகியாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

சீசன் 7க்கு பின் பூர்ணிமாவிற்கு செம அதிர்ஷ்டம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் தங்களுடய வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றனர்.

மேலும், படத்தின் டைட்டில் மற்றும் முதல்பார்வை என்பன விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *