பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! உயிருக்கு ஆபத்து… அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி! உயிருக்கு ஆபத்து… அதிர்ச்சியில் திரையுலகம்
  • PublishedMarch 5, 2025

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயற்சித்து, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்பனா ஐதராபாத்தில் உள்ள நிஜாபேட்டையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

கடந்த மூன்று நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் குடியிருப்பு வாசிகள் அவருடன் பேசுவதற்காக இன்று மாலை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் உள்ளிருந்து யாரும் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் அவருடைய உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் தொலைபேசி மூலம் கல்பனாவை தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் இல்லை.

இது பற்றி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து கட்டிலில் மயங்கி கிடந்த கல்பனாவை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்னணிப் பாடகி கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அவருடைய கணவர் சென்னையில் வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில் அவரை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளில் போலீசாரும் உறவினர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *