“தளபதி 68” போட்டோவ பாருங்க… விஷயம் என்னவா இருக்கும்?

“தளபதி 68” போட்டோவ பாருங்க…  விஷயம் என்னவா இருக்கும்?
  • PublishedOctober 2, 2023

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்திற்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார் விஜய்.

இந்தப் படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் சூட்டிங் வரும் 3ம் தேதி சென்னையிலேயே துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் சூட்டிங் பாடல் காட்சிகளுடன் துவங்கவுள்ளதாகவும் இந்த பாடலுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தர் நடனம் அமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அப்பா -மகன் கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், அப்பா விஜய்க்கு சினேகாவும் மகன் விஜய்க்கு பிரியங்கா மோகனும் ஜோடி சேரவுள்ளதாகவும் முன்னதாக கூறப்பட்டது.

இந்நிலையில் பிரபல தெலுங்குப்பட நாயகி மீனாட்சி சவுத்ரி படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இவர் முன்னதாக தமிழில் கொலை படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக குண்டூர் காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதா கூறப்பட்டுள்ளது.

இவர் பிரியங்கா சவுத்ரிக்கு மாற்றாக இணைந்துள்ளாரா அல்லது, படத்தில் இவரும் ஒரு நாயகியா என்பது குறித்து விரைவில் படக்குழு சார்பில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *