பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும் சலார்… முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸை திணறடிக்கும் சலார்… முதல் நாள் வசூல் ரிப்போர்ட்
  • PublishedDecember 23, 2023

கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்திருந்த சலார் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்திற்கு முதல் காட்சியிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிலும் பிரபாஸின் ரசிகர்கள் இதை கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடினார்கள். அதை தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது.

அந்த வகையில் சலார் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 70 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.

அதை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக இந்திய அளவில் 95 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கிறது.

அதேபோன்று உலக அளவில் 175 கோடி வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் பிரபாஸ் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த அடுத்தடுத்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. அதேபோல் கடைசியாக வெளிவந்த ஆதி புருஷ் பயங்கர ட்ரோல் செய்யப்பட்டது.

இதனாலேயே பிரபாஸின் மார்க்கெட் அவ்வளவுதான் என்ற பேச்சும் வெளிப்படையாக எழுந்தது. ஆனால் அதையெல்லாம் ஓரங்கட்டி சலார் மூலம் மறு பிரவேசம் செய்து இருக்கிறார பிரபாஸ்.

அதேபோல் இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *