என்ன விஜய்க்கு கதை கூறி லொக் பண்ணிட்டாரா பிரபுதேவா? அடுத்த படம் ரெடியா?

என்ன விஜய்க்கு கதை கூறி லொக் பண்ணிட்டாரா பிரபுதேவா? அடுத்த படம் ரெடியா?
  • PublishedMarch 26, 2024

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்துள்ளது.

படத்தின் சூட்டிங் அடுத்ததாக மாஸ்கோவில் நடக்கவுள்ள சூழலில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழுவினர் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மாஸ்கோவில் தொடர்ந்து GOAT படத்தின் சூட்டிங் இரு வாரங்கள் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரு வேறு கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அவரது கெட்டப் போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

சில கலவையான விமர்சனங்களையும் இந்த போஸ்டர்கள் பெற்றுள்ள நிலையில் படம் ரசிகர்களை எந்த அளவில் ஈர்க்கும் என்பது குறித்து படத்தின் ரிலீஸை தொடர்ந்து தெரிய வரும். இந்தப் படத்தில் மகன் கேரக்டருக்காக விஜய்க்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி கேரளாவில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஷூட்டிங்கில் வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட வெங்கட் பிரபுவின் கேங்கும் பிரபுதேவாவும் பங்கேற்றதை காண முடிந்தது.

சூட்டிங்கிற்காக கேரளா சென்ற பிரபுதேவா, முன்னதாக சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் சாமி கும்பிடும்படியான புகைப்படங்கள் வெளியாகின.

பிரபுதேவா நடன இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகர் இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் GOAT சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்க்கு பிரபுதேவா ஒரு சிறப்பான கதையை சொல்லியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடித்துவரும் GOAT படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விஜய்.

இந்தப் படத்தை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள நிலையில் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த ரேஸில் ஹெச் வினோத், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் உள்ள நிலையில் பிரபுதேவா இந்தப் படத்தை இயக்க வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *