பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சையா? நடந்தது என்ன? வெளிவந்த உண்மை…
பிரபல நடிகரும் நடிகர் சிவாஜி கணேசனின் மகனுமான பிரபுவுக்கு சமீபத்தில் மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின்படி, பிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராகவும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நடிகர் பிரபு கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவரது மூளையில் அனீரிஸம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஒரு தமனியில் வீக்கம் காணப்பட்டது. இதனால் உடனடி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, பிரபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அண்மையில் கிடைத்துள்ள அறிக்கையில், பிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை சீராகவும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மருத்தவர்களும் குடும்பத்தினரும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.
தற்போது அவர் தனது குடும்பத்தினரின் கண்காணிப்பில் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை” என பிரபுவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.