என்ன பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இவ்வளோ வயது வித்தியாசமா?
நடிகர் பிரேம்ஜி மற்றும் அவரது காதல் மனைவி இந்து இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
பிரேம்ஜியை தன் லக்கி சார்மாக பயன்படுத்தி வருகிறார் வெங்கட் பிரபு.
இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படங்களிலும் பிரேம்ஜி இடம்பெற்று இருக்கிறார். இப்படி நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் பிரேம்ஜி, 45 வயது வரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்தார்.
இதனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி எப்போ கல்யாணம் என்பது தான்.
அப்படி பலரும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த கேள்விக்கு அண்மையில் விடை கொடுத்தார் பிரேம்ஜி. அதன்படி பிரேம்ஜி இந்து என்கிற பெண்ணை கடந்த ஜூன் 9ந் தேதி கரம்பிடித்தார். அவரது திருமணம் திருத்தணியில் நடைபெற்றது.
பிரேம்ஜியின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பிரேம்ஜியின் மனைவி இந்து பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப்பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி பிரேம்ஜியின் மனைவி இந்து சேலத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறாராம். இருவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியதால் இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். பிரேம்ஜியை விட அவரது மனைவி இந்து 20 வயது இளையவராம்.
இனி இந்த வயது வித்தியாசத்தை வைத்து எவ்வாறான பிரச்சினைகள் கிளம்பப்போகின்றது பற்றி பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.